புதிய தளம் இடைவிடாத இன்னல்களும்,இனம் தெரியாத நெருக்கடிகளும் சூழ்ந்திருக்கும் வேளை அடுத்த கணம் எவ்வாறு ஆகும் என்ற பரிதவிப்பு இருந்து கொண்டேதான் இருக்கும்;தழுவக் கிடைப்பது சிறு துரும்பெனினும் அதனைப் பற்றிப் பிடிப்பதால் ஏதோ கதி மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வளர்க்க விரும்புவோம். இன்று இலங்கை நிலவரம் அந்தக் கதியில். தமிழர் பிரச்சனைதான் அப்படி,முழு இலங்கையையும் அந்தவாறாக எப்படிச் சொல்ல இயலும் எனக் கேட்கலாம்;உண்மை அவ்வாறாகவே உள்ளது. கொம்மன்வெல்த் மாநாடு 'பிள்ளையார் பிடிக்கப்போய்க் குரங்கு பிடித்த கதைபோல' இலங்கைக்கு ஆகிக் கொண்டிருக்கிறது. வடமாகாண சபைத் தேர்தல் குழப்பமின்றி நடந்து முடிந்துள்ளது. யுத்தக் குற்றவாளியாக சித்தரிக்க விரும்பும் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண சபைத்தலைவர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். நாடு முழு அளவில் இயல்புவாழ்வுக்கு மீண்டிருப்பதோடு கண்கவர் காட்சிக்குரிய அழகிய வளர்ச்சிக்குறிகளையும் காட்டிநிற்பதாக வெளிப்படுத்தஏற்ற வேலைப்பாடுகள் அசுரகதியில் நடந்துகொண்டிருக்கிறது. இருப்பினும் யுத்தக் குற்றங்கள்,நல்லிணக்க நடவடிக்கையின் போதாமை பற்றிய சர்ச்சைகள் வளர்ந்த படியே உள்ளன. போதாக்குறைக்கு பிரதம நீதியரசர் நீக்க விவகாரத்தில் கொம்மன்வெல்த் மனித உரிமைச் சட்டத்தரணிகள் (லண்டன்) சங்கம் பங்கெடுக்கக் கேட்கும் விவகாரம்;ஐ.தே.க.தலைமைப் பிரச்சனையில் அரசு நடவடிக்கை, குடிநீர் நச்சாவதற்கு எதிரான மக்கள் போராட்டத்தைக் கையாண்ட முறை தொடர்பிலான சர்ச்சை எனத் தொடரும் விவகாரங்கள் வில்லங்கமானவையாகவே வளர்வன. தமிழர் தரப்புக்கும் இது பல தலையிடிகளைத் தந்தபடிதான். ஜனாதிபதியை யுத்தக் குற்றவாளியாக சித்திரிக்க முனைப்புக் காட்டும் வேளை எப்படி அவர் முன் வடமாகாண முதல்வர் சத்தியப்பிரமாணம் எடுக்கலாம் எனக்கேட்கப்படுகிறது. கவனர் முன்னிலையைத் தவிர்ப்பது என்ற பேரிலேயே ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்டார். அது உண்மையல்ல உலகின் முன் இயல்புக்கு திரும்புகின்றோம் என்பதை உணர்த்துவதே இதன் குறிகாட்டி என்ற கருத்தும் புறக்கணிக்க இயல்லாதது. இதனைத் தவிர்க்க இயலாது என்ற கருத்து தமிழ்த் தேசியர்களிடம் வலுத்து வரக் காண்கிறோம். இந்தவழியில் முன்னேறுவதன் வாயிலாக மட்டுமே தமிழர் சுயநிர்ணயத்தை வெற்றிகொள்ள இயலும் என எடுத்துக்காட்டுவர். புலம்பெயர் தமிழ்த் தேசியர்களில் கணிசமானவர்களும் இதனை வலியுறுத்துகின்றனர். இது ஆரோக்கியமான மாற்றம். அதேவேளை 'அடைந்தால்...மரணதேவி'என்றபடியே உள்ளவர்களும் விட்டபாடாயில்லை. அவர்கள் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு என்பதில் நாட்டம் கொள்வதை விடவும், தமக்கான விருப்பம் சாத்தியமே இல்லாததாயினும் நிறைவேற்றித் தரப்பட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளது. சாத்தியமே இல்லை என்ற சூழல் முன்னென்றும் இல்லாத அளவில் அதிகரித்து வருகிறது. அதனை அமெரிக்காவைக் கொண்டு பெறலாம் என்பது இன்றைய கணிப்பு. அது சரியானதுதானா என்பது கேள்விக்கு அப்பாற்பட்டது. அவர்கள் இவ்வகையில் அங்கே செயலாற்றுவதை வைத்து இங்கே பேரினவாதிகள் மாகாணசபைக்கான அதிகாரங்களையே ஒன்றுமற்றதாக்க வேண்டும் என்கின்றனர். இனப்பிரச்சனை என்று எதுவுமில்லை, சிறு தேசிய இனங்கள் இதனைச் சிங்களத் தேசமாய் அங்கீகரித்து இணங்கி வாழவேண்டியது கட்டாயமானது என்பது அவர்கள் கருத்து. ஆயினும் புறத்தாக்கங்களும்,தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களும் காரணமாய்,அனைத்துத் தரப்பையும் இணங்கவைக்கும் தீர்வை எட்டும் நிர்ப்பந்தத்தில் அரசு. இந்த யதார்த்தத்தை விளங்கிய வகையில் தமிழ்த் தேசியத் தலைமை. இரு தரப்புமே மக்கள் நலனை முதன்மைப் படுத்த ஏற்றவர்கள் அல்ல என்றபோதிலும்,இன்றைய நிலையை விளங்கி மக்கள் விரோத நிலைப்படில்லாத அவசியப்படும் தீர்வை நோக்கி நகர்கின்றனர்.அதன்பொருட்டு தத்தம் தரப்பு தீவிர வாதிகளை சமாளிக்கும் பொறுப்பு அவர்கள் தலைகளில். சிரிய விவகாரத்தில் ருசியத் தலையீட்டால் ஈராக்-ஆப்கானிஸ்த்தான் போல் வீறுநடை போட இயலாமல் போன அமரிக்கா இந்த மாறும் உலகச் சமநிலையில் எங்களைப் பகடைக்காயாக்கிக்கொள்ள இடமளிக்காதிருக்க எவையெல்லாம் அவசியமோ அவற்றை முன்னெடுப்போம்!
Friday, November 29, 2013
"புதிய தளம் "

Subscribe to:
Posts (Atom)