Saturday, January 11, 2014

புதிய தளத்தின் தேடல் - நெடுந்தீவு.

புதிய தளத்தின் தேடல் :-

நெடுந்தீவு.


யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து நெடுந்தூரமான 45 கிலோமீட்டரின்,. தென்மேற்கில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியது நெடுந்தீவு. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (deft) என்று பெயரிட்டு அழைத்தார்கள்.. போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான்என அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் வெடியரசன் கோட்டை எனவும் இன்னொரு சாரார் ஒல்லாந்த கோட்டை எனவும் அழைத்து வருகின்றனர். ஆனால் ஒல்லாந்தர் கால ஆவணங்களில் நெடுந்தீவில் ஒரு கோட்டை கட்டப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. அதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டு புதை பொருள் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது.  நெடுந்தீவின் தென்கிழக்கே காணப்படும். முக்கோண வடிவில் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். உயர மானது 23 அடி அல்லது 5 மீற்றர். கடலில் வரும் கலங்களுக்கு புகை மூலம் இக்கோபுரம் வழி காட்டுகின்றது. இதைப்போன்ற ஒரு குயிண்டாக் கோபுரம் அனலை தீவுக் கரையிலுமுள்ளது. இதனையும் ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் பெருக்கு மரம் காணப்படும். குருதிப்பெருக்கம்இ நரம்புத் தளர்ச்சிஇ அம்மைஇ இரத்த அழுத்தம்இ தொற்றுநோய் ஆகியவற்றுக்கு பெருக்கு மரமத்தின் இலைகள்இ பட்டைகள்இ வேர்கள் போன்றவை பயன்படுகின்றன.  300 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்கு மரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.
 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் முதல் சபாநாயர் நெடுந்தீவை சேர்ந்த சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் என்பது சிறப்பு ..

அங்குள்ள ஊரின் பெயர்கள் 
ஆலங்கேணி ,பெரியான்துறை, மாவலித்துறை, பூமுனை, சாமித்தோட்டமுனை, வெல்லை, குந்துவாடி, தீர்த்தக்கரை

நோக்கம்:-
நெடுந்தீவில் வாழும் மக்களின் தேவைகளையும் இப்பிரதேசத்தில் விருத்தி
செய்யக்கூடிய துறைகளையும் அடையாளங் காணுதல்.

பொது விடயங்கள்.

மாகாணம்.......................வடக்கு
மாவட்டம்.......................யாழ்ப்பாணம்
உள்ளூராட்சி மன்றம்............................நெடுந்தீவு பிரதேச சபை
பரப்பளவு.........................47.5 சதுர கிலோ மீற்றர்
            
       எல்லைகள்........
              வடக்கு..................கடல் -              தெற்கு..................பாக்கு நீரிணை
              கிழக்கு................கடல் -       மேற்கு................பாக்கு நீரிணை

கிராம அலுவலர் பிரிவின் சனத்தொகை. - மொத்தம்................................4873

நெடுந்தீவு மேற்கு.......................................................................870
நெடுந்தீவு தெற்கு.......................................................................607
நெடுந்தீவு மத்தி மேற்கு.......................................................1145
நெடுந்தீவு மத்தி...........................................................................803
நெடுந்தீவு மத்தி கிழக்கு........................................................696
நெடுந்தீவு கிழக்கு......................................................................752

பாடசாலைகள் விபரம்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கிராம அலுவலர் பிரிவின் பெயர்...................................பாடசாலைப் பெயர்.

நெடுந்தீவு மேற்கு...................................................................மங்கையற்கரசி வித்தியாசாலை
நெடுந்தீவு தெற்கு...................................................................சிறீஸ்காந்தா வித்தியாலயம்.
                                         சைவப்பிரகாசா வித்தியாலயம்
நெடுந்தீவு மத்தி மேற்கு....................................................சீகிரியாம்பள்ளம் வித்தியாசாலை
நெடுந்தீவு மத்தி.....................................................................நெடுந்தீவு றோ..மகளிர் பாடசாலை
                                        நெடுந்தீவு மகா வித்தியாலயம்
-            -      -       .
நெடுந்தீவு கிழக்கு.................................. மாவலித்துறை றோ..பெண்கள் பாடசாலை,சுப்பிரமணியம் வித்தியாலயம்

                                          

நெடுந்தீவு J/1    '
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்;-----இப் பிரிவின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றதது.மேலும்,கூலி வேலை, மீன் பிடித் தொழில்களும்
இப் பிரிவில் மேற் கொள்ளப் படுகின்றது.பின்வரும் துறைகளில்;----
      * பனை தென்னை உற்பத்திப் பொருட்களை விருத்தி செய்தல்.
       *கால் நடை விவசாயம்.
புதிய தொழில் வய்ப்புக்களை விருத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

நிறுவனங்களும்,அமைப்புக்களும்;--- இப் பிரிவில் ஐக்கியதீபம் சன சமூக நிலையம்,ஐக்கிய தீபம் விளையாட்டுக் கழகம் மங்கையற்கரசி வித்தியாசாலை ஆகிய அமைப்புக்கள்,நிறுவனங்கள் காணப்படுகின்றன.
முக்கியமான இடங்கள்;----.       *வெடியரசன் கோட்டை

இப்பிரிவு மக்களால்   எதிர்நோக்கப் படுகின்ற பிரச்சினைகள்;----


       * காணிகள் ஊடாகவே அவர்களின் போக்குவரத்துப்பாதை அமைக்கப்படுவதுடன் போக்குவரத்துக்கேற்ற வகையில்
வீதியைச் செப்பனிடவேண்டிய தேவையுள்ளது.
       * சுடலை மண்டப அமைப்பு புனரமைக்கப் படவேண்டும்.
       * 1கி.மீ நீளமான பனங்காணி சுடலை வீதி தார் இட்டுச் செப்பனிடப்படவேண்டும்.(பாலம் புதிதாகச் செப்பனிடப்
படவேண்டும்.
       *2. 1/2 கி.மீ தூரத்திற்கு மின்சாரவசதி நிர்மாணிக்கப் படவேண்டும்.
       * ஐயனார் கோவில் கோட்டைகாடு சந்தியில் இருந்து செல்லும் கரவணன் தெரவைவீதி தார் இட்டுச் செப்பனிட
வேண்டும்.
       * கோட்டைக்காடு மங்கையற்கரசி வித்தியாசாலைக்குச் செல்லும் வீதி தாரிட்டுச் செப்பனிடப்படவேண்டும்.
       * ஐக்கியதீபம் சனசமூக நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வாசிகசாலையாகவும்,முன்பள்ளியாகவும் பிற்பகலில் மாணவர்கள் கல்விபயிலும் இடமாகவும் மாற்றப்படவேண்டும்.
       * ஐக்கியதீப அரங்கு புனரமைக்கப் படுவதுடன் விளையாட்டு அரங்கும் புனரமைக்கப் படவேண்டும்.
       * ஐக்கியதீபம் வெடியரசன் கோட்டை வீதி புனரமைக்கப் படவேண்டும்.
       * வெடியரசன் கோட்டைக்குச் செல்லும் வீதி சுற்றுலாத்துறைப் போக்குவரத்துக்கு உரியதாகவுள்ளதால் அவ்வீதிபுனரமைக்கப் படவேண்டும்.
      * சுற்றுலாத் துறைக்குரிய இடமாக வெடியரசன் கோட்டையும் அதன் சுற்றுச்சூழலும் அமைவதால், அது பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு செயற்பாடு அமையவேண்டும்.,
      * கற்றாளை போன்ற பயன்பாட்டிற்குரிய மூலிகைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
      * விதானையார் கிணற்றுப் பகுதியில் குடிதண்ணீருக்கும், குளிப்பதற்கும் தனித்தனி ஒவ்வொரு கிணறு அமைக்கப் படுதல் வேண்டும்
       * பெரியான் துறைக் கோட்டைவீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
       * மலைக் குளத்துவீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
       * குருக்கள் மடச் சந்தி - கோட்டைகாடு வீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
      * மாடு, குதிரை தண்ணீர் குடிப்பதற்கான துறவுகள் புனரமைக்கப் படுவதுடன் குடினீருக்கான ஏற்பாடும்.செய்யப்பட வேண்டும்.
       *தூண்காலை கிராமத்து1.1/2 கி.மீ.வீதி புனரமைப்புச் செய்யப்படவேண்டும்.
       * தூண்காலை கிராமத்துக்குக் குடி நீர் விநியோகம்.

 
நெடுந்தீவு J/2
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்;----இப் பிரிவின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது.மேலும்,கூலிவேலை,மீன்பிடித்தொழில்களும்
          இப் பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது.
பின்வரும் துறைகளில்:-----
* பனை, தென்னை சார் உற்பத்திகள்
* சுற்றுலாத்துறை
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள் அமைப்புக்கள்:---- இப் பிரிவில் வளர்மதி, நெடுந்தீவுமேற்கு, சனசமூக நிலையம், ஆவூர் சனசமூக
நிலையம்,மலைமகள் சனசமூக நிலையம், பனை அபிவிருத்திச்சபை போன்ற அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்:----இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றன.
* 42 அடி மனிதனின் பாதச்சுவடு
* குதிரை லாயம்.
* லோறஞ்சியார் கோவில்.
* வெல்லைக் கிணறு.
இப்பிரிவு மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்:------
* கொறுவாண்டு கிராமத்தில் மின்சார வசதிகளின்மை.
* சனசமூக நிலையங்கள் இயங்காமை.
* நூலக வசதிகளின்மை.
* நீண்ட காலமாகத் திருத்தப்படாத வீதிகள்.
* காணிகளிற்குச் செல்வதற்கு வீதிகள் ஒதுக்கப்படாமை.
* மீன்வாடிகள் அமைக்கப்படாமை.
* படகுகள் கட்டுவதற்கு ஏற்ப கடல் ஆழமாக்கப்பட வேண்டும்.
* புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படாமை.



நெடுந்தீவு J/3
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்:------இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது.
பின்வரும் துறைகளில்:-----
* பனை சார் உற்பத்திகள், தும்பு உற்பத்தி, ஈர்க்கு உற்பத்தி.
* படகுகள் ஓட்டுதல், வெளியிணைப்பு இயந்திரத் திருத்தம்.
      புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
ஏனைய நிறுவனங்கள் அமைப்புகள்:-------இப் பிரிவில் தபால் கந்தோர், போலீஸ் நிலையம், சமுர்த்தி வங்கி,
செஞ்சிலுவைச் சங்கம், அலையோசை கடற் தொழிலாளர் சங்கம்,அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்:-----இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பின்வருவன் காணப்படுகின்றன.
* மீகாமன் கோட்டை
* வெட்டுக் களிக்குளம்.
* காள முனை.
* புராதன தேவாலயங்கள் ( சென்-ஜேம்ஸ், சென் - தோமஸ் )
* மணற் பாங்கான கடற்கரை.

இப் பிரிவு மக்களால் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்:-----
* கோடைகாலத்தில் குடிநீர்ப்பிரச்சினை.
* அனைத்து உள்வீதிகளும் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்றது.
* மின்சார வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
* பஸ் போக்குவரத்துச் சீரின்மை.
* மதுபான நிலையம் இல்லை.
* எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை.
* மணல், சல்லி தரமாகப் பெற்றுக் கொள்ள முடியாமை.( அதிக விலை )
* படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு குறைவாகக் காணப்படுகின்றமை.
* மீன்பிடி நவீன மயப்படுத்தப்படாமை.

நெடுந்தீவு J/4
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்:-----இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது. மேலும், கூலி, அரசாங்க உத்தியோகம்
,தொழில்களும் இப் பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றது. பின்வரும் துறைகளில்:-----
* கால்நடை வளர்ப்பு
* மீன் பிடித்தொழிலுடன் தொடர்புடைய வலை பின்னல்,பதப்படுத்தல், இயந்திரங்கள் திருத்தல்.
* பனை சார் உற்பத்திகள்.
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள்இப் பிரிவில் நெடுந்தீடு உதவி அரசாங்க அதிபர் பணிமனை, நெடுந்தீவுப் பிரதேச சபை
கூட்டுறவு நகர், நூலகம், பொதுச்சந்தை, உடற்பயிற்சி நிலையம், வியாபார நிறுவனங்கள் போன்ற அமைப்புக்கள், நிறுவனங்கள்
காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்இப்பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றது.

          * ஒல்லாந்தர் காலப் புறாக்கூடு.
          * மணல் பாங்கான கடற்கரை
          * குதிரைகள்

இப்பிரிவு மக்களால் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்.

         * வெல்லை வீதி நீண்டகாலமாக பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளமை.
         * அநேக இடங்களிற்கு மின்சார வசதிகளின்மை.
         * வரட்சிக் காலங்களில் குடிநீர்ப் பிரச்சினை..
         * குளங்கள் புனரமைக்கப்படாமை.
         * கடற்கரைகளில் சுகாதாரமற்ற - நெருக்கமான குடியிருப்புக்கள்.
         * வீடுகளில் மதுபானம் விற்றல்.

நெடுந்தீவு J/5
 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்; இப் பிரிவின் பிரதான தொழிலாகக் கூலித்தொழில் காணப்படுகின்றது. மேலும், கடற் தொழில், மீன்பிடித் தொழில்
களும் இப்பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது. பின்வரும் துறைகளில்;-----

         * பன்ன வேலை.
         * தும்புத் தொழிற்சாலை
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள்;----

இப் பிரிவில் அன்ரனி சனசமூக நிலையம், சென்- அன்ரனி முன் பள்ளி, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், இலங்கை வங்கி,
கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், தனியார் கல்வி நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்;---- இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றன.

          * தாமழாப்புக் குளம்.
          * அனிலன் குளம்.
          * சன்னாங்குளம்.
          * சென் - பற்றிமா தேவாலயம்.
          * ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயம்.

இப் பிரிவு மக்களால் எதிர்நோக்கப் படுகின்ற பிரச்சினைகள்;----
           * குடி நீர் பற்றாக்குறை.
           * மின்சாரம் இன்மை.
           * மாரி காலத்தில் வெள்ளப் பெருக்கு.
           * உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பின்மை.
           * வீதிகள் செப்பனிடப் படாமை.
           * குளங்கள் ஆழமாக்கப் படாமை.

நெடுந்தீவு J/6
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தொழில்;--- இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது. மேலும், விவசாயம்,கூலித் தொழில்களும்
இப் பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது. பின்வரும் துறைகளில்;-----
           * கடற் தொழில்.
           * விவசாயம்.
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்களும், அமைப்புக்களும்;----  இப் பிரிவில் யா/ சுப்பிரமணியம் வித்தியாலயம், ஐங்கரன் சனசமூக நிலையம்,
உப தபாற்கந்தோர், குழந்தை யேசு முன் பள்ளி ஆகிய நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்;--- இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன கானப்படுகின்றன.

            * மாவலித் துறைமுகம்.
            * பெருக்கு மரம்.
            * குயிந்தா கோபுரம்.
            * வளரும் அம்மன் கல்.
            * குதிரை மருந்துக் கேணி.
            * கேணிகள்.
            * ஆடைத் தொழிற்சாலை.
            * அந்தோனியார் தேவாலயம்.
            * ஆழமான பிள்ளையார்.

    இப் பிரிவு மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்;----
             * மின்சாரம்.
             * குடிநீர்.,     
            * கடல் அணை.
             * வீதி.
             * போக்குவரத்து.

             * உற்பத்திப் பொருட்களைச் சந்தைப் படுத்தல்..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*
  இத் தேடலின் மூலம் இவ்வூரை அடுத்த கட்டத்திற்கான நகர்வை நோக்கி கொண்டு செல்ல இத் தகவல்கள் உதவும் என்பதே 'புதிய தளத்தின்' நோக்கமாகும் உள்ளூர்,வெளியூர்,கிராம ஆர்வலர்கள் இதனை கருத்தில் கொள்ளவார்கள் என நம்புகிறோம் .இத் தகவல்களை சேகரிக்க உதவிய ' புதிய  பண்பாட்டுத் தள ' தோழர்களுக்கு நன்றிகள். அடுத்த தேடல் 'நெடுங்கேணி / வவுனியா பிரதேசபை . 






































No comments:

Post a Comment