Saturday, January 11, 2014

புதிய தளத்தின் தேடல் - நெடுந்தீவு.

புதிய தளத்தின் தேடல் :-

நெடுந்தீவு.


யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து நெடுந்தூரமான 45 கிலோமீட்டரின்,. தென்மேற்கில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியது நெடுந்தீவு. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (deft) என்று பெயரிட்டு அழைத்தார்கள்.. போத்துக்கேயர் காலம் தொட்டு ஆங்கிலேயர் காலம் வரையான அன்னியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாகவே விளங்கியது. வெடியரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி ஆண்டு வந்தான்என அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர் வெடியரசன் கோட்டை எனவும் இன்னொரு சாரார் ஒல்லாந்த கோட்டை எனவும் அழைத்து வருகின்றனர். ஆனால் ஒல்லாந்தர் கால ஆவணங்களில் நெடுந்தீவில் ஒரு கோட்டை கட்டப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. அதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டு புதை பொருள் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது.  நெடுந்தீவின் தென்கிழக்கே காணப்படும். முக்கோண வடிவில் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். உயர மானது 23 அடி அல்லது 5 மீற்றர். கடலில் வரும் கலங்களுக்கு புகை மூலம் இக்கோபுரம் வழி காட்டுகின்றது. இதைப்போன்ற ஒரு குயிண்டாக் கோபுரம் அனலை தீவுக் கரையிலுமுள்ளது. இதனையும் ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது.

நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் பெருக்கு மரம் காணப்படும். குருதிப்பெருக்கம்இ நரம்புத் தளர்ச்சிஇ அம்மைஇ இரத்த அழுத்தம்இ தொற்றுநோய் ஆகியவற்றுக்கு பெருக்கு மரமத்தின் இலைகள்இ பட்டைகள்இ வேர்கள் போன்றவை பயன்படுகின்றன.  300 வருடகாலம் பழைமையான இந்தப் பெருக்கு மரத்தைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும்.
 40 அடி மனிதனின் பாதச் சுவட்டினை ஒத்த பாதச்சுவட்டைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் உட்பட பெருமளவானோர் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் முதல் சபாநாயர் நெடுந்தீவை சேர்ந்த சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் என்பது சிறப்பு ..

அங்குள்ள ஊரின் பெயர்கள் 
ஆலங்கேணி ,பெரியான்துறை, மாவலித்துறை, பூமுனை, சாமித்தோட்டமுனை, வெல்லை, குந்துவாடி, தீர்த்தக்கரை

நோக்கம்:-
நெடுந்தீவில் வாழும் மக்களின் தேவைகளையும் இப்பிரதேசத்தில் விருத்தி
செய்யக்கூடிய துறைகளையும் அடையாளங் காணுதல்.

பொது விடயங்கள்.

மாகாணம்.......................வடக்கு
மாவட்டம்.......................யாழ்ப்பாணம்
உள்ளூராட்சி மன்றம்............................நெடுந்தீவு பிரதேச சபை
பரப்பளவு.........................47.5 சதுர கிலோ மீற்றர்
            
       எல்லைகள்........
              வடக்கு..................கடல் -              தெற்கு..................பாக்கு நீரிணை
              கிழக்கு................கடல் -       மேற்கு................பாக்கு நீரிணை

கிராம அலுவலர் பிரிவின் சனத்தொகை. - மொத்தம்................................4873

நெடுந்தீவு மேற்கு.......................................................................870
நெடுந்தீவு தெற்கு.......................................................................607
நெடுந்தீவு மத்தி மேற்கு.......................................................1145
நெடுந்தீவு மத்தி...........................................................................803
நெடுந்தீவு மத்தி கிழக்கு........................................................696
நெடுந்தீவு கிழக்கு......................................................................752

பாடசாலைகள் விபரம்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
கிராம அலுவலர் பிரிவின் பெயர்...................................பாடசாலைப் பெயர்.

நெடுந்தீவு மேற்கு...................................................................மங்கையற்கரசி வித்தியாசாலை
நெடுந்தீவு தெற்கு...................................................................சிறீஸ்காந்தா வித்தியாலயம்.
                                         சைவப்பிரகாசா வித்தியாலயம்
நெடுந்தீவு மத்தி மேற்கு....................................................சீகிரியாம்பள்ளம் வித்தியாசாலை
நெடுந்தீவு மத்தி.....................................................................நெடுந்தீவு றோ..மகளிர் பாடசாலை
                                        நெடுந்தீவு மகா வித்தியாலயம்
-            -      -       .
நெடுந்தீவு கிழக்கு.................................. மாவலித்துறை றோ..பெண்கள் பாடசாலை,சுப்பிரமணியம் வித்தியாலயம்

                                          

நெடுந்தீவு J/1    '
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்;-----இப் பிரிவின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றதது.மேலும்,கூலி வேலை, மீன் பிடித் தொழில்களும்
இப் பிரிவில் மேற் கொள்ளப் படுகின்றது.பின்வரும் துறைகளில்;----
      * பனை தென்னை உற்பத்திப் பொருட்களை விருத்தி செய்தல்.
       *கால் நடை விவசாயம்.
புதிய தொழில் வய்ப்புக்களை விருத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

நிறுவனங்களும்,அமைப்புக்களும்;--- இப் பிரிவில் ஐக்கியதீபம் சன சமூக நிலையம்,ஐக்கிய தீபம் விளையாட்டுக் கழகம் மங்கையற்கரசி வித்தியாசாலை ஆகிய அமைப்புக்கள்,நிறுவனங்கள் காணப்படுகின்றன.
முக்கியமான இடங்கள்;----.       *வெடியரசன் கோட்டை

இப்பிரிவு மக்களால்   எதிர்நோக்கப் படுகின்ற பிரச்சினைகள்;----


       * காணிகள் ஊடாகவே அவர்களின் போக்குவரத்துப்பாதை அமைக்கப்படுவதுடன் போக்குவரத்துக்கேற்ற வகையில்
வீதியைச் செப்பனிடவேண்டிய தேவையுள்ளது.
       * சுடலை மண்டப அமைப்பு புனரமைக்கப் படவேண்டும்.
       * 1கி.மீ நீளமான பனங்காணி சுடலை வீதி தார் இட்டுச் செப்பனிடப்படவேண்டும்.(பாலம் புதிதாகச் செப்பனிடப்
படவேண்டும்.
       *2. 1/2 கி.மீ தூரத்திற்கு மின்சாரவசதி நிர்மாணிக்கப் படவேண்டும்.
       * ஐயனார் கோவில் கோட்டைகாடு சந்தியில் இருந்து செல்லும் கரவணன் தெரவைவீதி தார் இட்டுச் செப்பனிட
வேண்டும்.
       * கோட்டைக்காடு மங்கையற்கரசி வித்தியாசாலைக்குச் செல்லும் வீதி தாரிட்டுச் செப்பனிடப்படவேண்டும்.
       * ஐக்கியதீபம் சனசமூக நிலையம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வாசிகசாலையாகவும்,முன்பள்ளியாகவும் பிற்பகலில் மாணவர்கள் கல்விபயிலும் இடமாகவும் மாற்றப்படவேண்டும்.
       * ஐக்கியதீப அரங்கு புனரமைக்கப் படுவதுடன் விளையாட்டு அரங்கும் புனரமைக்கப் படவேண்டும்.
       * ஐக்கியதீபம் வெடியரசன் கோட்டை வீதி புனரமைக்கப் படவேண்டும்.
       * வெடியரசன் கோட்டைக்குச் செல்லும் வீதி சுற்றுலாத்துறைப் போக்குவரத்துக்கு உரியதாகவுள்ளதால் அவ்வீதிபுனரமைக்கப் படவேண்டும்.
      * சுற்றுலாத் துறைக்குரிய இடமாக வெடியரசன் கோட்டையும் அதன் சுற்றுச்சூழலும் அமைவதால், அது பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு செயற்பாடு அமையவேண்டும்.,
      * கற்றாளை போன்ற பயன்பாட்டிற்குரிய மூலிகைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
      * விதானையார் கிணற்றுப் பகுதியில் குடிதண்ணீருக்கும், குளிப்பதற்கும் தனித்தனி ஒவ்வொரு கிணறு அமைக்கப் படுதல் வேண்டும்
       * பெரியான் துறைக் கோட்டைவீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
       * மலைக் குளத்துவீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
       * குருக்கள் மடச் சந்தி - கோட்டைகாடு வீதி புனரமைக்கப் படுதல் வேண்டும்.
      * மாடு, குதிரை தண்ணீர் குடிப்பதற்கான துறவுகள் புனரமைக்கப் படுவதுடன் குடினீருக்கான ஏற்பாடும்.செய்யப்பட வேண்டும்.
       *தூண்காலை கிராமத்து1.1/2 கி.மீ.வீதி புனரமைப்புச் செய்யப்படவேண்டும்.
       * தூண்காலை கிராமத்துக்குக் குடி நீர் விநியோகம்.

 
நெடுந்தீவு J/2
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்;----இப் பிரிவின் பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது.மேலும்,கூலிவேலை,மீன்பிடித்தொழில்களும்
          இப் பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது.
பின்வரும் துறைகளில்:-----
* பனை, தென்னை சார் உற்பத்திகள்
* சுற்றுலாத்துறை
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள் அமைப்புக்கள்:---- இப் பிரிவில் வளர்மதி, நெடுந்தீவுமேற்கு, சனசமூக நிலையம், ஆவூர் சனசமூக
நிலையம்,மலைமகள் சனசமூக நிலையம், பனை அபிவிருத்திச்சபை போன்ற அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்:----இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றன.
* 42 அடி மனிதனின் பாதச்சுவடு
* குதிரை லாயம்.
* லோறஞ்சியார் கோவில்.
* வெல்லைக் கிணறு.
இப்பிரிவு மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்:------
* கொறுவாண்டு கிராமத்தில் மின்சார வசதிகளின்மை.
* சனசமூக நிலையங்கள் இயங்காமை.
* நூலக வசதிகளின்மை.
* நீண்ட காலமாகத் திருத்தப்படாத வீதிகள்.
* காணிகளிற்குச் செல்வதற்கு வீதிகள் ஒதுக்கப்படாமை.
* மீன்வாடிகள் அமைக்கப்படாமை.
* படகுகள் கட்டுவதற்கு ஏற்ப கடல் ஆழமாக்கப்பட வேண்டும்.
* புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படாமை.



நெடுந்தீவு J/3
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்:------இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது.
பின்வரும் துறைகளில்:-----
* பனை சார் உற்பத்திகள், தும்பு உற்பத்தி, ஈர்க்கு உற்பத்தி.
* படகுகள் ஓட்டுதல், வெளியிணைப்பு இயந்திரத் திருத்தம்.
      புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.
ஏனைய நிறுவனங்கள் அமைப்புகள்:-------இப் பிரிவில் தபால் கந்தோர், போலீஸ் நிலையம், சமுர்த்தி வங்கி,
செஞ்சிலுவைச் சங்கம், அலையோசை கடற் தொழிலாளர் சங்கம்,அமைப்புக்கள், நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்:-----இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகப் பின்வருவன் காணப்படுகின்றன.
* மீகாமன் கோட்டை
* வெட்டுக் களிக்குளம்.
* காள முனை.
* புராதன தேவாலயங்கள் ( சென்-ஜேம்ஸ், சென் - தோமஸ் )
* மணற் பாங்கான கடற்கரை.

இப் பிரிவு மக்களால் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்:-----
* கோடைகாலத்தில் குடிநீர்ப்பிரச்சினை.
* அனைத்து உள்வீதிகளும் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்றது.
* மின்சார வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
* பஸ் போக்குவரத்துச் சீரின்மை.
* மதுபான நிலையம் இல்லை.
* எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லை.
* மணல், சல்லி தரமாகப் பெற்றுக் கொள்ள முடியாமை.( அதிக விலை )
* படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு குறைவாகக் காணப்படுகின்றமை.
* மீன்பிடி நவீன மயப்படுத்தப்படாமை.

நெடுந்தீவு J/4
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்:-----இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது. மேலும், கூலி, அரசாங்க உத்தியோகம்
,தொழில்களும் இப் பிரிவில் மேற்கொள்ளப்படுகின்றது. பின்வரும் துறைகளில்:-----
* கால்நடை வளர்ப்பு
* மீன் பிடித்தொழிலுடன் தொடர்புடைய வலை பின்னல்,பதப்படுத்தல், இயந்திரங்கள் திருத்தல்.
* பனை சார் உற்பத்திகள்.
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள்இப் பிரிவில் நெடுந்தீடு உதவி அரசாங்க அதிபர் பணிமனை, நெடுந்தீவுப் பிரதேச சபை
கூட்டுறவு நகர், நூலகம், பொதுச்சந்தை, உடற்பயிற்சி நிலையம், வியாபார நிறுவனங்கள் போன்ற அமைப்புக்கள், நிறுவனங்கள்
காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்இப்பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றது.

          * ஒல்லாந்தர் காலப் புறாக்கூடு.
          * மணல் பாங்கான கடற்கரை
          * குதிரைகள்

இப்பிரிவு மக்களால் எதிர் நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்.

         * வெல்லை வீதி நீண்டகாலமாக பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளமை.
         * அநேக இடங்களிற்கு மின்சார வசதிகளின்மை.
         * வரட்சிக் காலங்களில் குடிநீர்ப் பிரச்சினை..
         * குளங்கள் புனரமைக்கப்படாமை.
         * கடற்கரைகளில் சுகாதாரமற்ற - நெருக்கமான குடியிருப்புக்கள்.
         * வீடுகளில் மதுபானம் விற்றல்.

நெடுந்தீவு J/5
 ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தொழில்; இப் பிரிவின் பிரதான தொழிலாகக் கூலித்தொழில் காணப்படுகின்றது. மேலும், கடற் தொழில், மீன்பிடித் தொழில்
களும் இப்பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது. பின்வரும் துறைகளில்;-----

         * பன்ன வேலை.
         * தும்புத் தொழிற்சாலை
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்கள், அமைப்புக்கள்;----

இப் பிரிவில் அன்ரனி சனசமூக நிலையம், சென்- அன்ரனி முன் பள்ளி, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், இலங்கை வங்கி,
கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், தனியார் கல்வி நிறுவனம் ஆகிய அமைப்புக்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்;---- இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன காணப்படுகின்றன.

          * தாமழாப்புக் குளம்.
          * அனிலன் குளம்.
          * சன்னாங்குளம்.
          * சென் - பற்றிமா தேவாலயம்.
          * ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயம்.

இப் பிரிவு மக்களால் எதிர்நோக்கப் படுகின்ற பிரச்சினைகள்;----
           * குடி நீர் பற்றாக்குறை.
           * மின்சாரம் இன்மை.
           * மாரி காலத்தில் வெள்ளப் பெருக்கு.
           * உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பின்மை.
           * வீதிகள் செப்பனிடப் படாமை.
           * குளங்கள் ஆழமாக்கப் படாமை.

நெடுந்தீவு J/6
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தொழில்;--- இப் பிரிவின் பிரதான தொழிலாக மீன்பிடி காணப்படுகின்றது. மேலும், விவசாயம்,கூலித் தொழில்களும்
இப் பிரிவில் மேற்கொள்ளப் படுகின்றது. பின்வரும் துறைகளில்;-----
           * கடற் தொழில்.
           * விவசாயம்.
புதிய தொழில் வாய்ப்புக்களை விருத்தி செய்யக் கூடியதாக உள்ளது.

ஏனைய நிறுவனங்களும், அமைப்புக்களும்;----  இப் பிரிவில் யா/ சுப்பிரமணியம் வித்தியாலயம், ஐங்கரன் சனசமூக நிலையம்,
உப தபாற்கந்தோர், குழந்தை யேசு முன் பள்ளி ஆகிய நிறுவனங்கள் காணப்படுகின்றன.

முக்கியமான இடங்கள்;--- இப் பிரிவின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக பின்வருவன கானப்படுகின்றன.

            * மாவலித் துறைமுகம்.
            * பெருக்கு மரம்.
            * குயிந்தா கோபுரம்.
            * வளரும் அம்மன் கல்.
            * குதிரை மருந்துக் கேணி.
            * கேணிகள்.
            * ஆடைத் தொழிற்சாலை.
            * அந்தோனியார் தேவாலயம்.
            * ஆழமான பிள்ளையார்.

    இப் பிரிவு மக்களால் எதிர்நோக்கப்படுகின்ற பிரச்சினைகள்;----
             * மின்சாரம்.
             * குடிநீர்.,     
            * கடல் அணை.
             * வீதி.
             * போக்குவரத்து.

             * உற்பத்திப் பொருட்களைச் சந்தைப் படுத்தல்..

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*
  இத் தேடலின் மூலம் இவ்வூரை அடுத்த கட்டத்திற்கான நகர்வை நோக்கி கொண்டு செல்ல இத் தகவல்கள் உதவும் என்பதே 'புதிய தளத்தின்' நோக்கமாகும் உள்ளூர்,வெளியூர்,கிராம ஆர்வலர்கள் இதனை கருத்தில் கொள்ளவார்கள் என நம்புகிறோம் .இத் தகவல்களை சேகரிக்க உதவிய ' புதிய  பண்பாட்டுத் தள ' தோழர்களுக்கு நன்றிகள். அடுத்த தேடல் 'நெடுங்கேணி / வவுனியா பிரதேசபை . 






































Wednesday, January 8, 2014

- 'புதியதளம் ' பற்றிய செய்திகள்.

தினக்குரல் பத்திரிகைகளில் வந்த 'புதியதளம் ' முதல் தளம்  பற்றிய செய்திகள். 





ஆசிரியர் தனபாலசிங்கம் 





                                                                    செல்லக்கண்ணு 










கே எஸ் சிவகுமாரன் 






------

Tuesday, January 7, 2014

சிப்பிலியாட்டம்  -மாற்றான்




இன்றைக்கு இருக்கும் பெரிசுகளும்(நயின்ரிகளும்) மறந்துவிட்டிருக்கக்கூடிய ஒரு விளையாட்டு சிப்பிலியாட்டம்;அந்த மறதியின் அரசியலைப் பேசுவதல்ல இந்த அரசியல் பக்கத்துக்கான கட்டுரை.அதுவும் பேசப்பட வேண்டிய விவகாரம் என்றாலும் இப்போது நாம் சிப்பிலியாடப்படுவதை இங்கு பேசுவதோடு இந்தச் சந்திப்பை நிறுத்திக்கொள்வோம்.மணலுக்குள் புதைத்துவைத்த குச்சியைக் கையில் ஏந்தியிருக்க,கண்ணைப் பொத்தியவர் எம்மைத்  தள்ளியபடி 'எவடம்,எவடம்' ன்று கேட்டுக்கொண்டே சிறிய இடமொன்றுக்குள் முன்னும்-பின்னும்,இடமும்-வலமுமாய்ச் சிப்பிலியாட்டிவிட்டு ஒருஇடத்தில் போட்டு,கை மணலாலேயே மூட வைத்து,மீண்டும் சிப்பிலியாட்டி தொடங்கிய இடத்தில் கொண்டுவந்து விட்டு விடுவார்;இப்போது வைத்த இடத்தைக் கண்டுபிடித்து,குச்சியை எடுத்துக் காட்ட வேண்டும்.அவர் 'எவடம்' கேட்கும்போது நாங்கள் 'புளியடி,புளியடி' என்று சொல்லி வருவோம்.ஆயினும் எந்தப் புளியடியில் போய்த் தேடினாலும் நாம் போட்ட குச்சி இருக்காது.
இன்று எம்மைச் சிப்பிலியாட்டுகிற அரசியல் சக்திகள் நாம் தொலைத்த தீர்வை கண்டடைய இடம் தராத வகையில் மிக மோசமாக சுற்ற வைக்கிறார்கள்.அரசு-தமிழ்த்தலைமை-மேலாதிக்க வல்லரசு என்ற முத்தரப்பு எம்மை திக்குத் திசை அறியாத வகையில் சிப்பிலியாட்டுகிறார்கள்.தமிழ்த் தலைமை எம்மால் தெரிவுசெய்யப்பட்ட,எமக்கான,எம்மைப் பிரதித்துவம் செய்யும் அமைப்பு;எம்மை அடக்கியாளும் அரசையும்,ஆதிக்க அரசியலை மேற்கொள்ளும் மேலாதிக்க வல்லரசையும் அதனோடு சம இடத்தில் வைத்து எப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி நியாயமானதுதான்;ஆயினும், ஜனநாயகத்தின் பேரால் எம்முன் நிறுத்தப்படுகிற அவர்கள் அப்படியே எமது அபிலாசைகளை நிறைவு செய்ய அவசியமில்லை.எம்முள் ஒரு பகுதியே அவர்கள் என்றாலும் எம்மில் வேறான தனி விருப்பங்களை உடைய பகுதியொன்றின் தேவைகளை நிறைவு செய்வதிலேயே அவர்களது கவனம் குவிய வாய்ப்புள்ளது அல்லவா?
இந்த மூன்று தரப்பும் பண்ணுகிற அரசியல் சதுராட்டத்தில் எமக்கான விடுதலை தொலைந்து போய்விடாமல்,எமக்கான பாதையைக் கண்டடைய நாம் கொள்ளவேண்டிய விழிப்புணர்வு குறித்து எச்சரிக்கையாய் இருப்பது அவசியம்.போகிற போக்கில் அவ்வப்போது ஒவ்வொன்றுக்கும் ஆத்திரம் கொண்டு,எதையாவது அவசரகோலமாய் சொல்லிப் போயிருப்போம்.அப்படியே ஓடிக்கொண்டிருந்தால் தலையில் சம்பல் அரைக்கிறவர்கள் அரைத்து எல்லாவற்றையும் வழித்தெடுத்துவிடுவார்கள்;எமது அடிமைத்தனம் நீடிக்கவே செய்யும்.கடந்து போகிறவை பற்றி பார்க்கும்போது எமக்கான பாதை பற்றித் தெளிவு பெறவும் இயலும்.
                     -1-
ொதுநலவாய உச்சி மாநாடு என்ற சிறப்புத் திருவிழா முடிந்து,வரவு-செலவுத்திட்டம் என்ற அடுத்த திருவிழாவும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.சம்பள ஏற்றம் எப்படி-எவ்வளவு என்று நாம் புலம்பிக்கொண்டிருக்க,வலது கையால் தருவதை இடது கையால் பிடுங்கும் கைங்கரியத்தில் அரசு கில்லாடித்தனமாய் வெற்றிபெற்றுவருகிறது.அபிவிருத்தி என்ற பெயரால் பண முதலைகளுக்கு வாய்பு வசதிகளைப் பெருக்கி,வற்றும் வயிற்று வெறுமையை வெளிப்படுத்த வீதிக்கு வரும் மக்களை கொன்றொழித்து அடக்கிவைக்க விரையும் இராணுவத்துக்கான வீதி அபிவிருத்தியும் அமோகமாய் நடந்தேறுகிறது.விலையேற்றம் மோசமாவது தவறான அரசியல் போக்கோடும் தொடர்பானது என்பதை மறைத்து,அரசு விரும்பாமலே அவரவர் விலையேற்றம் செய்துவிடுகிறார்கள் என்பதுபோல மக்கள் நம்பவைக்கப்படுகிறார்கள்.இதற்கான அண்மைக்கால உதாரணம் பஸ் கட்டண உயர்வு.பஸ் உரிமையாளர்கள் நீதிமன்றத்தையும் நாடித்தான் கட்டண உயர்வைச் செய்ய இயலுமாம்!அப்படியும் அவர்கள் விரும்பிய உயர்வை விடவே இல்லையாம்.
இந்த ஏமாற்றுகள் ஏதோ ஒரு சில அரசியல்வாதிகளது கைங்கரியம் என்பதற்கில்லை.பெரும் வலைப்பின்னலோடு பணமுதலைகள் தமது ஆடம்பர வாழ்வைப் பாதுகாக்கும் அரண்களைப் பல்வேறு தளங்களின் வாயிலாக மேற்கொள்வதின் ஒரு பகுதியே அரசியல்வாதிகளது இந்தத் திருகுதாளங்கள்.இந்த ஏமாற்றும் கலையில் இவர்கள் வல்லவர்களில்லை என்று கண்டால் பணமுதலைகள் இன்னொரு கபடதாரியை ஜனநாயக வழியில் நாமே தெரிவுசெய்ய வாய்ப்பும் தந்து மாற்ற ஏற்றதாகத்தான் எமது அரசியல் முறை உள்ளது.அவர்களும் போதிய காலம் ஏமாற்றி அம்பலமானபின்னர் மீண்டும் பழையவர் அல்லது இன்னொரு 'கறைபடியாத கை'."எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று வானொலியும் பாடிக்கொண்டே இருக்கிறது;ஏமாற நாம் உடன்பட இவ்வளவு என்ற கால வரையறை எதுவும் இல்லை என்பதால் ஆள்மாற்றி ஆள் ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இந்த ஏமாற்றும் தளத்தில் பிரதானமான ஒன்று ஊடகம்.எம்மைச் சிந்திக்கவும் இடம் தராமல்,நீங்களே தீர்மானிக்கிறீர்கள் என்று பழியையும் எம்மீதே போட்டு,எதைத்தந்து எந்த முடிவை எப்படி எடுப்பது என்பதற்கேற்ப வடிவமைத்துத் தருகிற அவர்களின் தகவல்களில் இருந்து நாம் வந்தடைகிற இடம் பண முதலைகளைப் பாதுகாக்கும் அரண்.அந்த இடத்தில் சரியாகவே வந்து சேர்ந்திருக்கிறோம் என்று கணிசமான காலம் இருந்து உழன்ற பின்னர்,மாற்றம் வேண்டுமா - இவரைக் கவனியுங்கள் என்று ஊடகம் விளம்பரப்படுத்தி எம்தலைமேல் ஏற்றும் இன்னொரு கபடதாரி மற்றொரு அரணுக்குள் மேலும் கணிசமான காலத்துக்கு எம்மை இட்டுவைப்பார்.கூட்டு முன்னணி அரசு ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு 1970 இல் அதிகாரத்துக்கு வந்து,புதிய குடியரசு அமைப்பொன்றைக் கொண்டுவந்து இன முரண்பாட்டை கூர்மைப்பட வைத்தது;அவர்களது தவறுகள் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு ஐ.தே..அரசு அதிகாரம்பெற வகைசெய்தது."யுத்தமென்றால் யுத்தம்" என்று அதிகாரத்துக்கு வந்த 1977 இலிருந்து முன்னெடுத்த போரின் வாயிலாகவே காலத்தை ஓட்ட முனைந்தது அந்த ஐ.தே..அரசு."பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட முடியாது,அதனோடு எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று அந்த வேதாளம் வேதாந்தம் வேறு ஓதியது. அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலான(ஜே.வி.பி.) ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தபோதிலும்,இன மோதலை வைத்துக் காலம்தள்ள விரும்பினர்.
ுள்ளிவாய்க்கால் முடிவு அவர்கள் இருந்திருந்தால் நடந்தேறியிராது என்ற கருத்து எம்மில் பலரிடம் உண்டு.அதில் ஒரு பகுதி உண்மை உண்டு.புலிகளை அழித்த இவர்களுக்கும் புலம்பெயர்ந்த புலிப் பூச்சாண்டியைக் காட்டித்தான் சிங்கள மக்களை ஏமாற்ற வேண்டியுள்ளது.என்றாலும் உள்ளூரில் முழுதாக யுத்தம் இல்லாத சூழல் இவர்களுக்கு அவசியப்படுவதுபோல ஐ.தே..விற்கு இருந்திருக்காது.மற்றொருபகுதி உண்மை,முள்ளிவாய்க்காலையும் விட அதிகமாகவே நீண்ட காலத்துக்கு அலங்கோலப்படும்படி யுத்தத்தை தொடர்ந்திருப்பார்கள் ஐ.தே..வினர்;எங்களுடைய தலைமையும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சண்டைபோட்டுக் கொண்டு இருந்திருப்பார்கள்.அது இல்லாமல் சீவிக்க முடியாத யுத்தப்பிரியர்களுக்கு இது சிரமதசைதான்.
இந்தச் சண்டையின் சிப்பிலியாட்டத்திலிருந்து கட்டுரையின் போக்கை இப்போதைக்கு காக்க அவசியமுள்ளது.
.தே.. அவ்வாறு யுத்தத்தை நீடிக்க விரும்பியபோதிலும்,சிங்கள மக்கள் சமாதானத்தையே வேண்டி நின்றார்கள்.சமாதானத்தை முன்னிறுத்திய ஐக்கிய முன்னணி(சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில்) அரசாங்கம் ஒன்று 1994இல் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.இருதரப்பினரது தவறுகளினால் மீண்டும் தொடங்கிய யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாலேயே இந்த அரசு எவ்வளவுதான் வயிற்றில் அடித்தாலும் நீடிக்க முடிகிறது.மீண்டும் ஐ.தே.. அதிகாரத்தைப் பெற எவ்வளவு முயன்றும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை காவாந்து பண்ணி நிற்கிறது.ஆயினும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிற அடிமடையர்களாக மக்கள் இருக்கப்போவதில்லை.அதேவேளை, சிறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வழங்குவதோடு தமது அடிப்படைப் பிரச்சனைகளின் தீர்வுக்கான முயற்சியை முன்னெடுக்கும் சரியான மார்க்கத்தைக் கண்டடையும் முயற்சிக்கான நாட்டம் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படாத இடைவெளி இருந்துகொண்டே உள்ளது.யுத்த வடு ஆறும் கால அவகாசம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்?
                          -2-
ுழு நாடும் சார்ந்த ஆரோக்கியமான அந்த மாற்றத்தின் வாயிலாகவே ஏமாற்றுகிறவர் சுழலில் இருந்து விடுபட்டு,மக்களுக்கான வாழ்க்கை ஆதாரங்களை வென்றெடுக்க இயலும்.பணமுதலைகளது அபிலாசையைவிட்டு மக்களுக்கான தேவைகளைத் தீர்ப்பது முதல்நிலை அடைந்தால்,இனவாதத்தை முன்வைத்து சண்டை சச்சரவுகளை நீடிப்பதால் தமது அரசை நீடிக்கும் அவசியம் எழாது.இன்றைய அரசும் மக்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதைவிடவும்,அதிகாரத்தில் உள்ள சுரண்டல் கும்பலைக் கொழுக்க வைக்கவே நாட்டம் கொண்டது.அதன் வெளிப்பாடாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் தனக்கு அளவான இனவாதத்தை கக்கிவருகிறது.
ுத்தக் குற்றத்தை விசாரிக்க வேண்டுமென்று பிரித்தானியா சொன்னால்,உன்னுடைய விசாரணை முப்பது வருடம் என்றால் என்னுடையது அறுபது வருடம் என்று சொல்லிக் காலம் கடத்த முயல்கின்றனர்.அயர்லாந்துக் குற்றவாளி அனுராதபுரத்தை ஒருக்கால் கடக்க முடியாவிட்டால்,மறுகால் யாழ்ப்பாணம் போக இயலாதென்று இல்லையே?போனார்கள்,என்ன பெரிதாக ஆகிவிட்டது?பிரித்தானியாவைப் புண்ணிய பூமியாக நினைக்கிறவர்களல்ல,இந்த நாட்டின் உழைக்கும் மக்களே முக்கியம்.அவர்களது நீண்டகால நலங்களுக்கு விரோதமாக தமிழ்-சிங்கள-முஸ்லிம் மக்களைப் பிளவுபடுத்துவதாகவே அரசின் செயற்பாடுகள் உள்ளன.
ிரித்தானியப் பிரதமரோடு மொட்டைமாடியிலிருந்து மக்களைப் பார்த்த நம்ம தலைவர்கள் நீங்கள் சிங்களத்தில் செய்வதைத் தமிழில் செய்கிறார்கள்;அவ்வளவுதானே வித்தியாசம்!நீங்கள் பொது உணர்வோடு உங்களுக்கு அவசியமான இனவாதத்தைப் பகிர்ந்துகொள்வீர்கள்;பிரச்சனைத் தீர்வின் பொருட்டு மக்கள் இனபேதங்கடந்து ஐக்கியப்பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருப்பீர்கள்.
க்கள் அவ்வாறு ஐக்கியப்பட்டுவிடக்கூடாது என்பது இவர்களது கருத்தென்றால்,முழுமையாக இனவாதத்தையே அடிப்படையாகக்கொண்டு இயங்கும் தீவிரவாதிகள் இன்னும் மோசமான மோதல்களை மக்கள் மத்தியில் விதைப்பவர்களாக இருக்கிறார்கள்.இவர்களது கபடத்தை அம்பலப்படுத்துகிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று அந்த மோசமான இனவாதிகளின் சதிக்குள் சிக்கக்கூடாது.பிரித்தானியாவையோ அமரிக்காவையோ எமது விமோசனத்துக்குரியவர்களாகக் காட்டும் இனவாதிகள் இத்தகையவர்கள்.அந்த 'சர்வதேச சமூகம்' அழுத்தம் கொடுத்துப் பொன்முட்டை எதுவும் கிடைப்பதில்லை;எந்தப் பொன்முட்டையிடும் வாத்தையும் கசாப்புக்கடைக்கு அனுப்பி ஏப்பம்விடுவதே அந்த மேலாதிக்க சக்திகளின் வாடிக்கை.
ட்டுக்கோட்டையில் தூக்கிய காவடி முள்ளிவாய்க்காலுக்கு போவான் ஏன்,பல்லாயிரம் மக்களைப் பலிகொடுத்தும் கழித்தல் பெறுமானத்தில் நிலைமை முடிந்தது ஏன் என மறுமதிப்பீடும்,எமது தவறுகள் குறித்த சுய விமரிசனமும் செய்யாமல்,துன்பியலுக்கு பிறரையே குற்றம்சாட்டி,ஓடிய திசையில் தொடரோட்டம் நிகழ்த்த விரும்புகிறவர்களாக இந்த இனவாதிகள் இருக்கிறார்கள்.இவர்கள் தமிழபிமானத்தின் பேரால் இந்த மண்ணில் உழைக்கும் தமிழ் மக்களை அவல வாழ்வு வாழவிட்டு தாங்கள் உப்பரிகைகளில் நீச்சலடிக்க நினைக்கின்றனர்.

இவர்களையும் சமாளித்தபடி,இவர்களளவு சண்டப்பிரசண்ட இனவாதமாக இல்லாத-ஏனைய இனங்களின் உழைக்கும் மக்களோடு ஐக்கியப்பட அனுமதிக்காத அளவிலான இனவாதத்தை முன்னெடுக்கும் தலைமை கூட்டமைப்பு என்பதாக வாய்த்துள்ளது.யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸ் முற்போக்கான தேசிய உணர்வைத் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுத்தபோது,ஜி.ஜி.பொன்னம்பலம் இனவாத அரசியலை முன்னிறுத்தினார்.அதன் தொடர் வளர்ச்சியே முள்ளிவாய்க்கால் வரை நீண்டது.இது குறித்த மறு மதிப்பீடும்,யாழ்ப்பாண வாலிபர் கொங்கிரஸின் இன்றைய பரிணமிப்பும் பற்றிய தேடல் இன்றைய தமிழ்த் தலைமையிடமும் இல்லை.
நேற்று வரை முன்னெடுத்த பிரிவினைவாதத்தை இவர்கள் கைவிடும்போது,இவர்களைக் காட்டிக் கொடுப்பவர்களாக இன்றைய அதிதீவிரவாத ஈழ வாதிகள் குற்றம்சாட்டுவர்.இவர்களை இயக்கும் மேலாதிக்க சக்தியின் அபிலாசையை நிறைவேற்ற முனையும்போது,இவர்கள் மிதமான இனவாதத்துக்கு இறங்கி அரசோடு இணங்கிவருகின்றனர்.யுத்தக் குற்றவாளியாக ஈழவாதிகள் குற்றம் சாட்டும் ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதலமைச்சர் பதவிப்பிரமாணம் மேற்கொள்வது இந்த மாற்றத்தின் பிரதிபலிப்பே!!!